×

சிறைக்குள் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்: திகார் சிறை அதிகாரிகள் உட்பட 99 போலீசார் இடமாற்றம்

புதுடெல்லி: திகார் சிறைக்குள் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறை அதிகாரிகள் உட்பட 99 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் ரோகிணி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளியான ரவுடி தில்லு தாஜ்பூரி என்பவர், திகார் சிறையில் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளில், சீருடை அணிந்த போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடந்ததாகவும், அப்போது அவர்கள் தலையிட்டு தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக திகார் சிறை உதவி கண்காணிப்பாளர் உட்பட 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 99 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கர ரவுடிகளின் பட்டியலை சிறை நிர்வாகம் தயாரித்து, அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளது. சிறைக்குள் மீண்டும் கும்பல் தாக்குதல் சம்பவம் நடக்குமா? என்ற அச்சத்தில் திகார் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில் இருக்கும் கோகி கும்பலால் தில்லு தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து கைதிகளையும் தனித்தனி அறைகளுக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக சைலன்ட் மோடில் இருக்கும் 30 கைதிகள், திடீரென தங்கள் எதிரி கும்பலை தாக்கும் நடவடிக்கையில் இறங்குவதால், அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.

The post சிறைக்குள் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம்: திகார் சிறை அதிகாரிகள் உட்பட 99 போலீசார் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Dhigar ,New Delhi ,Delhi ,Digar ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி